யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்!

May 22, 2018

யேர்மனியின் தலைநகரத்தின்  வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ் வாழ்  மக்களால் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட்டது.இவ் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் கோரமாக கொல்லப்பட்ட   மக்களுக்காவும் , மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும் அடையாள தூபி வைக்கப்பட்டு இளையோர்களால் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாரிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றதுடன் இளையோர்களால் பன்னாட்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு விளக்கங்களும்  கொடுக்கப்பட்டது. 

எமது விடுதலைக்கான பாதைகளை தேடி பன்னாட்டு அரங்கில் அரசியல் ரீதியான செயற்பாடுகளை துரிதப்படுத்தி தொடர்ச்சியாக  தளராது உழைப்போம் என இளையோர்களால் உறுதி எடுக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.