யேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான சுவரொட்டிகள்!

ஞாயிறு ஓகஸ்ட் 02, 2015

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் தாயகத்தில் நடைபெற இருக்கும் இக் காலப்பகுதியான இன்று யேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான சுவரொட்டிகள் தமிழ் மக்கள் செல்லும் பல்பொருள் அங்காடிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

 

அத்தோடு தாயகம் தேசியம் , சுயநிர்ணய உரிமை கோட்பாட்டில் தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்த புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ள தமது உறவுகளையும் , நண்பர்களையும் சைக்கில் சின்னத்திற்கு வாக்களிக்க கோரப்படுகின்றனர்.

 

யேர்மனியில் தமிழ் மக்களுக்கு இச் செய்தியை எடுத்துச் செல்லும் வகையில் ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரம் விநியோகிக்கபடுகின்றது . அத்தோடு குறும் தகவலாகவும் ,முகநூலிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வலுவாக்க இளையோர்களால் சில செயற்திட்டங்களும் ஆரம்பிக்கப்படுள்ளது.