யேர்மனியில் தமிழர் கைது: போர்க் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை!

August 07, 2018

போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி யேர்மனியில் தமிழர் ஒருவரை யேர்மனிய காவல்துறையினர் கைது செய்தமை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டது என்பது சங்கதி-24 இணையத்தின் ஆங்கில ஊடகமான Tamil Polity இணையத்தின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 

2008ஆம் தம்மிடம் சரணடைந்த 16 சிறீலங்கா படையினரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுப் படுகொலை செய்ததாகவும், அதற்கு முன் அவர்களைக் கட்டி வைப்பதற்கும், பின்னர் காவல் காப்பதற்கும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் டுசுல்டோர்வ் நகரில் வசிக்கும் .சிவதீபன் (வயது 36) என்பவரைக் கடந்த 01.08.18 அன்று யேர்மனிய காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

 

எனினும் இவ்வாறான ஒரு போர்க் கைதிகள் படுகொலைச் சம்பவம் 2008ஆம் ஆண்டோ, அல்லது அதற்கு முன்னரோ அன்றி பின்னரோ இடம்பெறவில்லை என்பது  Tamil Polity மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

அத்துடன் யேர்மனியில் கைது செய்யப்பட்ட நபர் தனது அகதித் தஞ்ச விண்ணப்பத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்று யேர்மனியில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இடைநிலைப் பொறுப்பு வகித்த முன்னாள் போராளி ஒருவர் Tamil Polity இற்கு தெரிவித்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை