யேர்மனியில் நடைபெற்ற அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள்!

May 29, 2018

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள்,  100 க்கும் மேலான நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ள வேளையில்  காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இப்படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்றைய தினம் யேர்மனியில் பேர்லின் தலைநகரத்திலும் பிராங்பேர்ட் மாநகரத்தில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக தமிழ் மக்களால் அடையாள கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வுகளில் தூத்துக்குடி கொடூர படுகொலையை கண்டித்து கோசங்கள் எழுப்பியதோடு, பதாதைகளை  தாங்கியவாறு மக்கள் ஈடுபட்டனர். இறுதியில் இந்திய தூதரகத்துக்கு மனு கையளிக்கப்பட்டு கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுற்றது. பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை பயமுறுத்தும் வகையில் இந்திய தூதரகத்தால் நிழற்படங்கள் எடுக்கப்பட்டது.  

 தூத்துக்குடி மக்களின் படுகொலையை கண்டித்து உலகளாவிய ரீதியில் நடைபெற்ற போராட்டங்களால் நேற்றைய தினம் ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக மூடுவதற்க்கு அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....