யேர்மனியில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனின் நினைவு வணக்க நிகழ்வு

ஞாயிறு நவம்பர் 08, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன்  மற்றும் அவருடன் வீரச்சாவை தழுவிக் கொண்ட ஏனைய மாவீர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனியில் Bochum மற்றும் Berlin  நகரங்களில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது ,

ஈழ விடுதலைப் போராட்டத்தில் அனைத்து தமிழ் உள்ளங்களிலும் அழியாத எண்ணங்களில் பதியப்பட்ட  மாவீரன் நித்திய புன்னகை அழகன்   பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் தமிழ் மக்களுக்கான அர்பணிப்பு அழியாத சுடராக இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றது .

உன்னதமான இம் மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்வணக்கம் , அகவணக்கம் செலுத்தப்பட்டு , எழுச்சி நடனங்கள் மற்றும் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் வீர வரலாற்று பதிவுகள் காணொளி ஊடாக திரையில் காண்பிக்கப்பட்டது . தொடர்ந்து காலத்தின் தேவை கருதி பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்கள் விட்டுச் சென்ற எமது பணியை முன்னிறுத்தி சிறப்புரைகளும் இடம்பெற்றது .