யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள்!

June 17, 2017

பொன். சிவகுமாரன் நினைவாக கொண்டாடப்படும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை (05.06.2017) முன்னிட்டு 14.06.2017 அன்று யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளைத் திரையில், பல வர்ணங்களில் தங்களது கைரேகையை பதிந்து சென்றனர்.

 பல வர்ணங்களினான கைரேகைகளானது, இந்த பூமிப்பந்தில் அனைவரும் சமம் என்ற கருவைத் தாங்கி நின்றது. அத்தோடு மக்களிற்கு தமிழீழத்தில் சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்டு வரும் இனவழிப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.

 

 

 

இணைப்பு: 
செய்திகள்