யேர்மனியில் வீரப்புதல்வி தமிழினியின் நினைவேந்தல் நிகழ்வு

சனி நவம்பர் 07, 2015

வீரப்புதல்வி தமிழினி அவர்களின் இழப்பு என்பது உலகத் தமிழர்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத சாதனைக்கு வித்திட்ட ஒரு உன்னதமான பன்முக ஆளுமையை கொண்ட வீரப்புதல்வி .

சிங்கள பேரினவாத அரசால் கைதுசெய்யப்பட்டு , சொல்லனா துன்பங்களை அனுபவித்தாலும் ,கொண்ட கொள்கையில் உறுதியோடு வாழ்ந்து , மரணித்த வீரப்புதல்வி . தனது எண்ணங்களிலும் எழுத்துகளிலும் , தாயக சிந்தனையை என்றும் வரைந்திட்ட மாபெரும் மேதை .

வீரப்புதல்வி தமிழினி அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனியில் Nürnberg, München, Heibronn, Augsburg , Müllager,Kierkentek ,Landau ,Bielefeld , Berlin ,Essen நகரங்களில் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது .

ஏனைய நகரங்களை  தொடர்ந்து கடந்த நாட்களில் யேர்மனி வீஸ்பாடன்  நகரிலும் வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக  முன்னெடுக்கப்பட்டது .