யேர்மன் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் சமகால அரசியல் கலந்துரையாடல்
தாயகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவின் அவசியத்தை யேர்மனியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மக்கள் கலந்துரையாடலில் வலுவாக உணரப்படுகின்றது . அந்தவகையில் Stuttgart நகரில் நேற்றைய தினமும் , München நகரில் இன்றும் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் இணையவழி ஊடாக கலந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் ,திரு ராசைய்யா செல்லையா மற்றும் திரு கஜேந்திரன் செல்வராஜா , திருமதி பத்மினி சிதம்பரநாதன் , மற்றும் பிரித்தானியாவில் இருந்து ஊடகவியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு கோபி அவர்களும் தமிழ்த் தேசியத்தின் இருப்பை உறுதிப்படுத்த தாயகத்தில் தமிழ் மக்கள் சைக்கில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய தேவையை தெளிவாக எடுத்துரைத்தனர் .
தமிழ்த் தேசிய அரசியலில் நேர்மையாகவும் உண்மையாகவும் சேவை ஆற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் எனவும் , தமது உறவுகளுக்கு தாயகத்தில் இவ்விடையத்தை எடுத்துரைத்து தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவோம் என கலந்துரையாடலில் பங்கெடுத்த மக்கள் தமது ஆதரவை தெரிவுபடுத்தினர் .