யோகா நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒரு சாதனைக்கு தயாராகும் மைசூரு!

June 10, 2018

மைசூருவில் கடந்த ஆண்டை போலவே மீண்டும் ஒரு பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை வரும் ஜூன் 21-ம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம், மைசூருவில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. ஒரே இடத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இந்நிலையில், சுகாதர ஆர்வலர்கள், நமது பண்பாட்டு கலையான யோகவை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு மைசூருவில் மீண்டும் ஒரு  பிரம்மாண்டமான யோகா நிகழ்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

உலக யோகா தினம் கொண்டாடப்படும் தினமான ஜூன் 21-ம் திகதி மைசூரு மாவட்டம் சாமுண்டி பகுதியில் உள்ள மைசூரு ரேஸ் கிளப்பில் இந்த நிகழ்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், போதிய நிதி இல்லாத காரணத்தினால் கின்னஸ் சாதனை அலுவலகத்துக்கு இந்நிகழ்ச்சியை பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல இம்முறை சாதனையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.