ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ரத்து

April 08, 2017

ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படும் எடுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ்அப் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 12 முதல் 17-ஆம் திகதிகளில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது,

தனித்தனியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. எனவே எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் பயணம் செய்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை. ரசிகர்கள் தங்களை சந்தித்து பேசும்படி ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை சந்திக்க அவர் முடிவு செய்திருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, வருகிற 12-ந்திகதி முதல் 17-ந்திகதி வரை சென்னையில் இந்த நடக்கும் கூட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்