ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உத்தரவு!

March 23, 2018

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.