ரணில் தலைமையில் விசேட கூட்டம்!

May 19, 2017

இன்று(19) காலை யாழ்ப்பாணத்திற்கு விசேட உலங்குவானூர்திமூலம் வருகை தந்த சிறிலங்காப் பிரதமர் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம் நடைபெற்றது.

‘பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மகளிர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் அனைவரும் பயன்பெறும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டம் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியாக பிரதமரின் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
செவ்வாய் March 20, 2018

ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.