ரணில் திருப்பதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்!

வெள்ளி ஓகஸ்ட் 03, 2018

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (03) காலை, திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானச் சேவைக்குச் சொந்தமான, விசேட விமானத்தினூடாக, திருமலையில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்குச் சென்று, வெங்கடாசலபதியைத் தரிசனம் செய்தாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பதி கோயிலில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக, நேற்றைய தினம், பிரதமர், இந்தியாவுக்குப் பயணமானார். அவரோடு, பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் மேலுமிரு அமைச்சர்களும் சென்றுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.