ரணில் பதவி விலகவேண்டும்!

யூலை 17, 2017

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மகிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு நியமிக்கவேண்டுமெனபிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கைக்கு பதில் கிடைக்காது விடின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி கூட்டு எதிரணியில் இணையப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அருந்திக்க பெர்னாண்டோ ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடந்த 12நாள் இது குறித்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாகவும், அவர் இந்த யோசனையை எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை கைவிடும்படியும் கேட்டிருந்தார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினால் அதற்கான மாற்று ஏற்பாடு என்னவென ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தம்முடனான கலந்துரையாடலின் போது கேட்டிருந்தார்.

அதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க தமது குழு விரும்புவதாகவும் பெரும்பான்மையானோரது விருப்பமும் அதுவே என தான் அவரிடம்  கூறியதாக பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.