ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சி

Thursday January 11, 2018

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தப் பிரேரணையில் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள்  கையொப்பமிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த கையொப்பமிடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை வைத்து பிரதமருக்கு எதிராக இந்த பிரேரணை தயார்படுத்தப்பட்டுள்ளது. அடுத்துவரும் நாட்களில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக மத்திய வங்கி முறி மோசடிக்கு ஆதரவானவர்கள் யார்? எதிரானவர்கள் யார்? என்பதை மக்கள் அறிந்துகொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.