ரயர் வெடித்ததால் விபத்துக்குள்ளான கார்!

Thursday December 06, 2018

மட்டக்களப்பு – கொழும்பு நெடுங்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் இன்று பகல்  இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி வைத்திய அதிகாரி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் கே. சுகுமார் பயணம் செய்த காரின் சில்லு வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மரத்தில் மோதி நின்றுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்றவுடன் காரில் பொருத்தப்பட்டிருந்த காற்றழுத்த பை (Air bag) கணப்பொழுதில் சுயமாக இயங்கியதால் தான் எதுவித காயங்களோ உயிராபத்தோ இன்றி காப்பாற்றப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார். எனினும் விபத்தில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் கடமை முடிந்து மட்டக்களப்பு நகரிலுள்ள தனது வீடு நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.