ரவீந்திர குணவர்த்தனவை கைதுசெய்யவே விசேட அமைச்சரவை கூட்டம்?

Thursday September 13, 2018

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததை தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது இடம்பெற்றுவரும் அதேவேளை முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேயகுணவர்த்தனவை கைதுசெய்வது குறித்து ஆராய்வதற்காவே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின்  சிரேஸ்ட படையதிகாரியான ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைதுசெய்வதற்காகவே இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா   குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் வாக்கு மூலம் வழங்குவதற்கு முன்னதாக முப்படைகளின் பிரதானி மெக்சிக்கோ சென்றுள்ளமையும் சிறிலங்கா  அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.