ரஷிய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி!

Wednesday December 06, 2017

ரஷிய அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ரஷியா நாட்டின் பிரதமராக முன்னர் பொறுப்பு வகித்த விளாடிமிர் புதின்(65) கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது ஆறாண்டு பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

வோல்கா நகரத்தில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றியபோது தனது விருப்பத்தை அவர் வெளியிட்டார். எதிர்வரும் தேர்தலில் அவர் வெற்றிபெற்று அதிபரானால் வரும் 2024-ம் ஆண்டுவரை நீடிக்கும் புதினின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ரஷியாவில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் என தெரிகிறது.