ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு

சனி மே 14, 2016

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், Nordic-நாடுகள் என்றழைக்கப்படும் டென்மார்க், ஃபின்லந்து, ஐஸ்லந்து, நார்வே, ஸ்வீடன் ஆகியவற்றின் தலைவர்களும் கூட்டாக, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Baltic வட்டாரத்தில் மாஸ்கோவின் ராணுவ ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த அக்கறையைத் தெரிவித்த அவர்கள், ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

சிரியா, ஈராக் விவகாரங்கள் குறித்தும், அதன் விளைவாக ஏற்பட்ட ஐரோப்பிய அகதிகள் பிரச்சனை குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர். ரஷ்யாவின் ராணுவ ஆக்கிரமிப்பு குறித்த அக்கறையில், ஆறு தலைவர்களுக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.