ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது!

June 13, 2017

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த வருடம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில், அதிபருக்கான போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ள நாவன்லி அவ்வப்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  41 வயதாகும் நாவன்லி அங்கீகரிக்கப்படாத, போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்திய குற்றத்திற்காக காவல் துறை  அவரை கைது செய்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதில் நாடு முழுவதம் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாஸ்கோவில் மட்டும் 823 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

செய்திகள்
செவ்வாய் May 15, 2018

பிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என