ராணியுடன் பூட்டான் மன்னர் டெல்லி பயணம்!

ஒக்டோபர் 31, 2017

4 நாள் அரசு முறை பயணமாக மனைவியுடன் இந்தியா வந்த பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக்-ஐ டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

4 நாள் அரசு முறை பயணமாக மனைவி மற்றும் மகனுடன் இன்று இந்தியா வந்த பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக்-ஐ டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

நவம்பர் மூன்றாம் தேதிவரை இங்கு தங்கி இருக்கும் பூட்டான் மன்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

பூட்டான் மன்னர், அவரது மனைவியும் அரசியுமான கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் மற்றும் நேபாள குழுவினருக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்கிறார்.

செய்திகள்
வெள்ளி யூலை 20, 2018

மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். 

 

புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!