ராமேசுவரம் மீனவர்கள் 5–வது நாளாக தொடர் வேலை நிறுத்தம்!

புதன் செப்டம்பர் 09, 2015

இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டு சேதமடைந்த தமிழக விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 5–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 2500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர். 5–வது நாளாக இன்றும் அவர்களின் வேலை நிறுத்தம் நீடித்தது.

 

வேலை நிறுத்தத்தால் ராமேசுவரத்தில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் பெரிய விசைப்படகுகள் மட்டுமே பங்கேற்று உள்ளன. சிறிய விசைப்படகுகள் வைத்திருப்போர் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.