ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு!

March 01, 2018

பௌத்த பேரினவாதத்தால்  படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில்  யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும்  அருங்காட்சியகத்தில் வரலாற்று பதிவாக சர்வதேச மாநாடு சென்ற திங்கள் கிழமை  நடைபெற்றது. 

இம் மாநாட்டில் சர்வதேச ரீதியாக அரசியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள் , கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு  ரொகிங்கா மக்களுக்கு இழைக்கப்படும் இனவழிப்பை கண்டித்தும் அதை உடனடியாக நிறுத்துவதற்கும் ஓங்கி குரல்கொடுத்தார்கள். யேர்மன் பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் , யேர்மன் மனிதவுரிமை சபையின்  பிரதிநிதிகழும் கலந்துகொண்டனர்.  இவ் நிகழ்வில்  கல்விமான்கள் தமது உரைகளில் தமிழின அழிப்பை குறிப்பிட்டும்  பேசினார்கள். 

மாநாட்டின் இறுதியில் இன அழிப்பிற்கு உள்ளான அல்லது உள்ளாக்கப்படும் அனைத்து இனத்தையும் நினைவேந்தி   Brandenburger Tor  முன்றலில் இருந்து யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் கல்லறைகளை நோக்கி அடையாள  சுடர்ப்பேரணி கடும் குளிரிலும்  சிறப்பாக நடைபெற்றது.பேரணியின் இறுதியில் அனைத்து இன  மக்களின் பிரதிநிதிகளும் தோழமையோடும் ஒற்றுமையோடும்  இனப்படுகொலையை கண்டித்தும் உரையாற்றினார்கள். இம் மாநாட்டை குழப்புவதற்கு  மியார்மாரின் தூதரகத்தால் சிலர் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின்