லசந்த கொலை வழக்கில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம்

ஒக்டோபர் 12, 2017

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கில், இதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 295 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாக இரகசிய காவல் துறை  இன்று (12) கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு ஆஜரான இரகசிய காவல் துறை  பிரதிநிதி, பெறப்பட்ட வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி சம்பாஷணைகள் குறித்த விபரங்கள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்