லசந்த படுகொலை ! நாடாளுமன்றில் பேசப்பட்டவை என்ன?

Friday March 23, 2018

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு, நாடா­ளு­மன்றில் லசந்­தவின் கொலை தொடர்பில் பேசப்­பட்ட சில ஹன்சார்ட் அறிக்­கை­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக  கோரி­யுள்­ளது. 

இது தொடர்பில் கல்­கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் இடை­யீட்டு மனு­வூ­டாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு இக்­கோ­ரிக்­கை­யை முன்­வைத்­துள்­ளது. அத்­துடன் லசந்த விக்­ர­ம­துங்க பயன்­ப­டுத்­திய வங்­கிக்­க­ணக்­குகள் தொடர்­பி­லான  விப­ரங்­களை அந்தந்த வங்­கிகளூடா­கவும் அவர் தொடர்­பு­களை முன்­னெ­டுத்த தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில்  குறித்த தொலை­பேசிச் சேவை வழங்­குநர் நிறு­வனங்கள் ஊடா­கவும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு அறிக்கை கோரி­யுள்­ளது.

குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள கல்­கிைஸ நீதிவான் நீதி­மன்றம்,  ஹன்சார்ட் அறிக்கை, தொலை­பேசி தொடர்­பி­லான விப­ர­மான அறிக்கை மற்றும் வங்­கிக்­க­ணக்­குகள் குறித்த அறிக்­கை­களை குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு  கைய­ளிக்க, பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரிகள், முகா­மை­யா­ளர்­களு க்கு தனித்­த­னி­யாக உத்­த­ரவு பிறப்­பித்­துள் ­ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி கல்­கிஸை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அத்­தி­டியவில் தனது காரில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்டார்.  இது தொடர்பில்  கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின் சிறப்பு விசா­ர­ணை­களை  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் 
காவல் துறை  மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட காவல் துறை அத்­தி­யட்சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திஸே­ராவின் கீழ் காவல் துறை பரி­சோ­த­கர்­க­ளான நிசாந்த சில்வா மற்றும் சுதத் குமார ஆகியோர் அடங்­கிய சிறப்புக் குழு முன்­னெ­டுத்­துள்­ளது. இதன்­போது லசந்த சுட்டுக் கொல்­லப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் கூரிய ஆயுதமொன்­றினால் தலையில் பல­மாக தாக்கப்­பட்டே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணைகள் ஊடாக நிரூ­பித்­துள்­ளது.

அதன்­படி சம்­பவம் தொடர்பில் முன்னாள் இரா­ணுவ புல­னாய்வு சார்ஜன்ட் மேஜர் தர அதி­கா­ரி­யான பிரே­மா­னத்த உட­லா­கம என்­ப­வ­ரையும் பொலிஸார் கைது செய்த நிலையில் பின்னர் அவ­ருக்கு பிணை வழங்­கப்பட்­டது. லசந்த கொலையின் சாட்­சி­யாளர் ஒரு­வரை கடத்­தி­யமை தொடர்பில் அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அண்­மையில் லசந்த கொலை தொடர்பில் சாட்­சி­யங்­களை மாற்­றி­யமை, அழித்தமை தொடர்பில் முன்னாள் கல்கிஸை குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி சுகந்தபால வும் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் காவல் துறை மா அதிபர் பிரசன்ன நாணயக் காரவும் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் உள்ளனர்.