லண்டன் தீ விபத்து: உயிரிழப்பு 58 ஆக அதிகரிப்பு

June 17, 2017

லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக்  குடியிருப்பில் கடந்த புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எனவே வேகமாக பற்றி எரிந்த தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.

அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டனர். யார், எங்கே இருக்கிறார்கள்? என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 

முழுவீச்சில் நடைபெற்ற தீயணைப்புப் பணி முடிந்ததும் மீட்பு நடவடிக்கைகள தொடங்கி நடைபெற்று வருகின்றன. தீப்பிடித்த கட்டடம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதால் உள்ளே முழுவீச்சில் மீட்பு பணியை தொடங்க முடியவில்லை. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதை காவல்துறை உறுதி செய்திருந்தது. 

இந்நிலையில், காணாமல் போன மேலும் பலரது நிலை பற்றி தெரியவில்லை. எனவே, அவர்களும் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். அவர்களையெல்லாம் சேர்த்து, மொத்தம் 58 பேர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பிரதமர் தெரசா மே உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு பேரணி நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்தார். அப்போது, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதால், அதிர்ச்சி அடைந்த பிரதமர், கூட்டத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார்.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

குர்திஸ்தான் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மொசூல் அணைக்கட்டை அண்டிய பகுதியில் ஈராக்கிய படைகளுக்கும், குர்தி பெஸ்மேகா படையினருக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களில் ஈராக்கிய படைகளுக்கு உதவ

திங்கள் ஒக்டோபர் 16, 2017

குர்திஸ்தான் மக்களின் வரலாற்று நகரங்களில் ஒன்றான எண்ணெய் வளம் மிக்க கேர்குர் நகர் மீது ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன் பெரும் வலிந்த தாக்குதல் ஒன்றை ஈராக்கிய படைகள் தொடங்கியுள்ளன.