லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஸங்க நியமனம்

ஒக்டோபர் 13, 2017

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸங்க நாணயக்காரவை நியமித்துள்ளதாக அரச பொது நிறுவனங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால், நிஸங்க நாணயக்காரவிற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.  தாய்வான் வங்கி ஒன்றில் பலகோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சலீல முணசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நிறுவனத்தின் தலைவராக நிஸங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
திங்கள் ஒக்டோபர் 23, 2017

அம்பலன்தோட்டை - வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திங்கள் ஒக்டோபர் 23, 2017

கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசின் அசமந்தச் செயற்பாட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு...

திங்கள் ஒக்டோபர் 23, 2017

சிங்கள அரசின் காணி பறிப்பு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது ஏன்? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி