லெப்.கேணல் மதி அவர்களின் 30 ஆண்டு நினைவு!

Monday December 10, 2018

முன்னாள் யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் மதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.12.2008 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இந்தியப் படை மட்டும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஆகியவற்றினால் சுற்றிவளைக்கப்பட்டவேளை லெப்.கேணல் மதி அவர்கள் தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரனை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.