லெப். கேணல் கௌசல்யன்- மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்

February 06, 2017

மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உட்பட போராளிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மீள்கட்டுமான பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட வேளை 07.02.2005 அன்று மட்டுமாவட்ட இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவத்தால் நடாத்தப்பட்டதாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டு மாவட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவத்தால் நடாத்தப்பட்டதாக்குதலில் படுகாயமடைந்து 08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

செய்திகள்
வியாழன் நவம்பர் 02, 2017

பல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான