வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணத்துக்கு அனுமதி

வெள்ளி மார்ச் 03, 2017

வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் ஏற்கனவே திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இதையும் மீறி சிறுவர்- சிறுமிகளுக்கு திருமணங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதிலும் சில விதிவிலக்குகளை புகுத்தி உள்ளனர். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பெண்களுக்கு திருமண வயது 18 என்று குறிப்பிட்டு விட்டு மற்றொரு பக்கம் சில காரணங்களுக்காக 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் 14 வயது சிறுமிகளுக்கும் தாராளமாக திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில அமைப்புகள் இந்த புதிய சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.