வங்கி அட்டை திருடி பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்தவர்கள் கைது!

May 20, 2017

பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி அதன்மூலம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெழுவ பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரே இவ்வாறு காவல் துறையினரால்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணொருவரின் வங்கி அட்டை திருடி பல வங்கி ஏ.டி.எம் இயந்திரம் மூலம் 335000 ரூபாவை கொள்ளையடித்துள்ளனர். வங்கி அட்டையின் உரிமையாளரான பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்போது அவர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு உதவியாக இருந்த மற்றொரு பெண் வங்கி அட்டையை களவாடியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவியாக இருந்த பெண் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது தனது பையில் இருந்த ஏ.டி.எம் அட்டை காணாமல் போயுள்ளதனை அவர் அறிந்து கொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண் சிறீலங்கா  வந்த பின்னர் அவர் தனது கணக்கிற்கான வங்கி புத்தகத்தில் 50000 ரூபாய் பணம் மீளவும் பெற்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பம் வரையிலும் அவரது கணக்கில் பணம் இருந்துள்ளது. மீண்டும் ஒரு நாள் பணம் எடுப்பதற்காக அந்த பெண் வங்கிக்கு செல்லும் போது வங்கி கணக்கில் 335000 ரூபாய் பணம் குறைவடைந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த வங்கி அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டுள்ளார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காலி, உடுகம மற்றும் நெழுவ ஆகிய கிளைகளில் இந்த பணம் எடுக்கப்பட்டதனால் அவர் இது தொடர்பில் நெழுவ பொலிஸாரிடம் கடந்த மாதம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்த காவல் துறை , நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த வங்கிகளின் சீ.சீ.டீ.வி கமராக ஊடாக சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நெழுவ பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 41 வயதுடைய அண்ணன் தங்கை இருவரும் 17 ஆம் திகதி  கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.