வடகொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் இடம்பெற்ற விபத்தில் 200 பேர் வரை பலி

Wednesday November 01, 2017

வடகொரியா கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டுள்ளது. இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. 

வடகொரியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அணு ஆயுத பரிசோதனை மையத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கம் இடிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்ற போதும் இன்றைய தினமே செய்தி வௌியாகியுள்ளது.  விபத்து நேரிட்டதும் 100 பணியாளர்கள் பலியாகினர். பின்னர் மீட்பு பணிகள் நடைபெற்றது, அப்போதும் விபத்து நேரிட்டு உள்ளது. இச்சம்பவங்களில் 200க்கும் அதிமானோர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

செப்டம்பர் மாதம் 3ம் திகதி வடகொரியா 100 கிலோ டொன் எடைகொண்ட ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளதுெ. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை கூடமே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 

1945-ம் ஆண்டு ஹிரோசிமாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது பயன்படுத்திய குண்டை விட இது 7 மடங்கு அதிக சக்திவாய்ந்தது என தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ச்சியாக வடகொரியா அணு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சோதனை செய்ததன் காரணமாக பரிசோதனை கூடம் பலவீனமாகி உள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

பொருளாதார தடை, சர்வதேச அளவில் தனிமை என பல்வேறு நிலைகளில் நெருக்கடியை சிக்கி வரும் வடகொரியா தன்னுடைய நிலைப்பாட்டை இதுவரையில் மாற்றவில்லை, தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனையை செய்து வருகிறது.