வடக்கில் 125 நிலையான வீடுகள்!

Thursday January 11, 2018

யுத்தத்தினால் பதிக்கப்பட்டு வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்காக, இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதிக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், 125 நிலையான வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்தப் பகுதிகளுக்கான பிரதேச செயலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கே இந்த வீட்டுத் திட்டம் வழங்கி வைக்கப்படவுள்ளது.