வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

திங்கள் அக்டோபர் 26, 2015

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ளது. இதன் அதிர்வுகள் பாகிஸ்தான், வடக்கு இந்தியாவில் பரவலாக உணரப்பட்டுள்ளன.

 

இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் ஜார்முக்கு 45 கிலோமீற்றர் வடகிழக்காக உள்ள மலைப்பகுதிகளில் பதிவாகியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உயரமான அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேறும் காட்சிகளை பாகிஸ்தான் செய்திச் சேவைகள் ஒளிபரப்பியுள்ளன.

 

இதுவரை, எந்த உயிரிழப்புக்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் இலங்கையில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.