வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது

Monday July 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

இலங்கை இராணுவம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளாது.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் சிலரும் சுயலாபத்தை தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாகவும், இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் வெளியான செய்தியில் உண்மை இல்லை.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் முகாம்களுக்கு இடையில் வளப்பகிர்வு நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன என்றார்.