வடக்கு தொடருந்து சேவை பாதிப்பு!

நவம்பர் 15, 2017

பரசன்கஸ்வெவ - மதவாச்சிக்கு இடையிலான தொடருந்து  பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில்  ரஜரட்ட ரெஜின தொடருந்து தடம் புரண்டமையால் வடக்கு தொடருந்து போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த தொடருந்து சேவையும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு - கோட்டையில் இருந்தும்,  கல்கிசையில் இருந்தும்  யாழ் நோக்கிச் செல்லும் ரயில்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள்
புதன் January 17, 2018

ஆயுதத்தைசிறிலங்கா இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும்

புதன் January 17, 2018

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம்