வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

வெள்ளி சனவரி 11, 2019

தமிழர்களின் தேசியப் பண்டிகையான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை சூவிடுமுறை வழங்கியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகை எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதை  முன்னிட்டு 14 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. .
 
இந்த விடுமுறைக்கான மாற்றுப்பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் - என ஆளுநர் அறிவித்துள்ளார்.