வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக யாழ். மக்கள் போர்க்கொடி

வெள்ளி சனவரி 11, 2019

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக யாழ். மக்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். 

வடக்கில் உள்ள திணைக்களங்கள் அனைத்திலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என வடமாகா ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள அறிவிப்புக்கு எதிராகவே யாழ். மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். 

வடக்கு தனித் தமிழ் பிரதேசம். இங்கு தமிழ் மொழியே பிரதான மொழி. நாம் தமிழ் மொழியிலேயே எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். இதில் ஆளுநர் தலையிட முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர். 

வடக்கில் சிங்கள மொழியையும் பெயர்ப் பலகைகளில் எழுதுவது போன்று தெற்கில் தமிழ் மொழியையும் சேர்த்து எழுதுவார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

வடக்கே சிங்களவர்களைக் குடியேற்றுவதை நோக்கமாகக் கொண்டே வடக்கு ஆளுநர் செயற்படுகின்றார். அவர் பௌத்த கடும்போக்குவாதி என்பதை வெளிப்படுத்துகின்றார் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

எமது பிரதேசங்களில் தமிழ் மொழியில் மட்டுமே நாம் பெயர்ப் பலகைகளை அமைத்திருப்போம் என குறிப்பிட்ட சில திணைக்களத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கு மக்களுக்கு எதிராக மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.