வடமராட்சியில் அத்து மீறும் புத்தர்கள்!

August 13, 2017

பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள வைரவ கோவிலிற்கு பக்கத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் சிறிதாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டி ருந்தது.

இந்த சிலை சிறிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இராணுவத்தினரால் குறித்த புத்தர் சிலை இருந்த இடம் விஸ்தரிக்கப்பட்டு தற்போது புதிதாக புத்த கோவில் போன்ற அமைப்பில் புத்தர் சிலையுடனான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு அருகில் முன்னரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இராணுவத்தினர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யுத்தத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் நிரந்தரமாக உள்ள இந்து கோவிலுக்கு நடத்தப்பட்டு வந்த பூஜை வழிபாடுகள் மற்றும் பொங்கல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான இடவசதி போதாமையாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த கோவிலுக்கு அருகாமையில் பாரிய படை முகாம் ஒன்று காணப்படுவதோடு, படையினரால் உணவகம் ஒன்றும் நடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை பருத்தித்துறை முனை பகுதியிலும் தனியார் காணி ஒன்றில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டு நீண்டகாலமான நிலையில், அதுவும் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆலமரங்கள் காணப்படும் இடங்களில் இந்து கோவில்கள் காணப்பட்டாலும் அதனை மறைத்து புத்த கோவில்க ளை அமைக்கும் முயற்சிகளில் இராணுவத்தினர் இறங்கியுள்ளமை அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

செய்திகள்
புதன் August 16, 2017

12 ஆயிரத்து 190 பேருக்கு நாங்கள் புனர்வாழ்வளிதோம். அவர்கள் சட்டவிரோதமான சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை....