வடமாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினால் பாரிய சூழல் பிரச்சினை

யூலை 17, 2017

சட்டவிரோத மணல் அகழ்வு, தற்போது வடமாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வருகின்றது. வடமாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக குறைந்த விலையில் மணலை பெற்ற மக்கள், தற்போது பல மடங்கு விலைக்கு மணலை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 17,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு டிப்பர் மணலை தற்போது 38,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மன்னார் மாவட்டத்தின் தோத்தாவாடி, இழுப்பைக்கடவை, கூராய், மடு, பாலம்பிட்டி, அருவியாறு மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

இங்கு மணல் அகழ்வதற்கு அநுராதபுரத்திலுள்ள – புவிச்சரிதவியல் திணைக்கள அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார். எவ்வாறாயினும் வியாபார நோக்கத்திற்காக அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி செயற்படும் சிலரால் மக்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கச்சாய் கடற்கரையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் எதுவும் வழங்கப்படாத நிலையில், இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.

தென்மராட்சி – கொப்பேலி கடற்கரையிலும் இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கெற்பேலி கடற்கரையில் கடல் மட்டத்தினை விடவும் அழமான முறையில் மணல் அகழப்பட்டுள்ளதால் கடல் நீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் காணப்படுகின்றது.

மணல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நேரடியாக தலையிட்டு மாற்று வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்ட விரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையல்லவா?

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.