வட்டுவாகலில் போராட்டம் நடத்திய மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய கடற்படை!

Thursday February 22, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் மக்களின் காணிகளை சுபீகரித்து 637 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள கோத்தபாய கடற்படை முகாமுக்காக காணிகளை நிரந்தரமாக கையகப்படுத்த நில அளவீட்டு பணி இன்று(22-02-2018) நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

குறித்த காணியை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (22-02-2018) அளவீடு செய்யப்படும் என காணி நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 இதனையடுத்து, காணி சுவீகரிப்பை கைவிடுமாறு கோரி பொதுக்கள், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படை மற்றும் காவல் துறை  காணொளி எடுத்ததோடு புகைப்படமும் எடுத்து அச்சுறுத்து வகையில் செயறப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.