வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா மேனன்!

புதன் நவம்பர் 21, 2018

வீரா, தமிழ்ப்படம் 2 படங்களில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன், தன்னைப் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

வீரா, தமிழ்ப்படம் 2 படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். விமலுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது.

இதுபற்றி கூறும்போது ‘அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். ஆனால் இது தமிழ்ப்படம் படத்தில் நான் நடித்த வேடத்துக்கு நேர் எதிராக சீரியஸ் வேடமாக இருக்கும். கொலையை துப்பறியும் திரில்லர் வகை கதை அது.

அடுத்து விமலுடன் நடிப்பதாக வரும் செய்தி உண்மை இல்லை. அப்படி யாரும் என்னை அணுகவில்லை. தெலுங்கிலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொறுமையாக பரிசீலித்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.