வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா

April 10, 2017

சமுத்திகனி இயக்கும் ’ஆகாச மிட்டாய்’ மலையாள படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக இனியா நடிக்கவுள்ளார்.சமுத்திரகனி இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் தமிழில் வெளிவந்த ‘அப்பா’ படம் வெற்றிப்பட வரிசையில் அமைந்தது. இந்த படத்தை தற்போது மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். பூஜையுடன் கூடிய படப்பிடிப்பில் கலந்துகொண்ட வரலட்சுமி, அடுத்த சில நாட்களிலேயே ஆணாதிக்க பிரச்சினையால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு வேறு நாயகியை தேடும் படலம் நடைபெற்று வந்தது. 

கடைசியாக தற்போது இனியாவை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் நடந்துவரும் படப்பிடிப்பில் இனியா கலந்துகொண்டு நடித்து வருகிறார். மலையாள படங்களில் சமுத்திரகனி நடித்திருந்தாலும், மலையாளத்தில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.