வரலாறு படைத்த மண்ணில் இது ஒரு வரலாற்று துயரம்

March 28, 2017

தியாகம் மலர்ந்த நல்லூர் விதியை இப்போது எல்லாம் அடிக்கடி சாக்கடை கழிவுகள் நிரப்பி செல்கின்றன.....இன்னும் எத்தனை பேர் எம் மக்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய போகின்றீர்கள்?

கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தால் உண்மைக்கான குரலின் முன் நின்றிட முடியுமா?  முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையான மக்களுக்காக போராடாத இந்த கூலிக்கு கூடும் கூட்டம் வீசிய காசுக்காக நாயை விட விசுவாசம் காட்ட முயல்கின்றன. ஆனாலும் நியாயமான மக்கள் கேள்விகளுக்கு இந்த கூலிகளால் பதில் சொல்ல முடியவில்லை பாவம்.

பணம் வீசி விட்டு பதுங்கி நிற்கும் முட்டாள்களே உணர்வோடு போராடுவதற்கும் பணத்திற்காக பதாகை தூக்குவதற்கும் வேறுபாடு உண்டு என அறியுங்கள் முட்டாள்களா..!

சொந்தமாக சிந்தியுங்கள்...ஏன் எதற்கு என்று எல்லோரும் கேள்வி கேளுங்கள். எமது இன்றைய ஈழத்து தம்பிகளே! நீங்கள் குடியிருப்பது உலகம் வியக்கும் வீரம் படைத்த மண்ணில் என்பதை ஒவ்வொரு நொடியும் மனதில் இருத்துங்கள்..!! 

ஏற்கெனவே நலிந்து, நொடிந்து போயுள்ள எமது மக்கள் சுமந்துகொண்டுள்ள வலி வேதனைகளை புரிந்துகொள்ளாமல், அவர்களின் இல்லாமையையும், இயலாமையையும் தமது ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்கின்றது இந்த 'லைக்கா'.

எம்க்குத் தெரியவில்லை, எம்மை கொத்துக்கொத்தாக சிதைத்து முகாம்களில் கையேந்த வைத்தவர்களிற்கும் உங்களுக்கும் பெரியளவிலான வேறுபாடுகள் எதுவும் இருப்பதாக!?

செய்திகள்
புதன் March 21, 2018

ஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில்

வியாழன் March 08, 2018

தமிழ் இனத்தின் நீதிக்காய் ஈருருளி பயணத்தை மேற்கொண்டுவரும் உறவுகளின் உள்ளத்துடிப்போடு தமிழ்முரசம் தன்னை இணைந்துக்கொண்ட உணர்வான தருணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்