வரலாற்றை மீண்டும் எழுச்சியோடு படைத்திருக்கிறது கேப்பாபிலவு.!

March 02, 2017

கேப்பாபிலவு மக்களின் போராட்ட வெற்றி என்பது முள்ளிவாய்க்காலின் பின் சோர்ந்திருந்த ஈழ தமிழினத்திற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றி! இது முற்று முழுதான மக்கள் போராட்டத்தின் வெற்றி. 

எதற்கும் விலை போகாமல் எதற்கும் அஞ்சாமல் குழந்தைகளும் பெண்களுமாக போராடிய மக்களின் தற்துணிவுக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி.  எத்தனை விலை பேசல்கள் ....எத்தனை அச்சுறுத்தல்கள் .....ஆனால் போராடிய மக்கள் உறுதியாக நின்றதால் கிடைத்த வெற்றி இதுவாகும். அது மட்டுமன்றி தாயகத்தில் பல பகுதிகளில் இருந்தும் உலகெங்கும் இருந்தும் பொது தளத்திலும் என இம்மக்களுக்காக குரல் கொடுத்த தமிழ் மக்களின் ஒற்றுமையின் வெற்றி இதுவாகும்.

தலைவர்களால் முடியாததை மக்கள் வென்று எடுத்து காட்டி உள்ளார்கள். உண்மையும் நீதியும் தம் வசம் கொண்ட உறுதியாக போராடும் மக்களே இலக்கினை அடைவார்கள்!

அடுத்த சந்ததியும் போராட களமிறங்கிய வரலாற்றை மீண்டும் ஒருமுறை எழுச்சியோடு படைத்திருக்கிறது கேப்பாபிலவு போராட்டம்.!

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.