வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று!

February 26, 2017

2017 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. சூரியன் முற்றாக மறையும் நிகழ்வு இலங்கை நேரப்படி இரவு 8.28 அளவில் நடப்பதால் இலங்கையர்கள் இதனை காணும் சந்தர்ப்பம் கிடைக்காது.

எனினும் சூரிய கிரகணத்தின் ஆரம்பத்தை மட்டும் இலங்கையிலும் இந்தியாவிலும் காணமுடியும். சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் நிலவு நேர் கோட்டில் வருவதால் நிலவு சூரியனின் பெரும் பகுதியை மறைத்து விடும் என்பதுடன் சூரியனின் ஒளிவட்டம் மாத்திரமே தென்படும்.

எது எப்படி இருந்த போதிலும் தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இன்று நடைபெறும் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்