வருமானத்திற்காக மதுவில் மயங்கி கிடக்க வேண்டுமா?

புதன் சனவரி 16, 2019

தமிழக அரசின் 20% வருமானத்திற்காக மக்கள் மது போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மதுவால் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இதனால் மதுவிலக்கை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர்  தினத்தை முன்னிட்டு இன்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அவசியம் தேவை. உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்தது, கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி.10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது. கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம். தமிழக அரசின் வருமானத்துக்காக 20% மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.