வர்த்தக நிலையங்கள் பூட்டு, வீதிகள் வெறிச்சோடின, மக்கள் நடமாட்டம் இல்லை

ஒக்டோபர் 13, 2017

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று நடத்தப்பட்டு வருகின்ற ஹர்த்தால் காரணமாக வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. 

அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று கைதிகள், வவுனியா நீதிமன்றில் நடைபெற்றுவரும் தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்ற எடுத்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் 19 அமைப்புக்களின் ஆதரவுடன் இன்று வடக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள