வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்

December 09, 2016

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கையை சேர்ந்த கவிஞர் அஸ்மின் மற்றும் புறம்போக்கு இசையமைப்பாளர் வர்சன் ஆகிய இருவரால் இணைந்து இரங்கல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று செய்திகள்  வெளியாகின.

மேலும்   செல்வி ஜெயலலிதாவின் சமாதியில் குறித்த பாடல் ஒளிபரப்பபட்டதாகவும், செய்திகள் வெளியாகி வந்தமை  குறிப்பிடத்தக்கது.இதேவேளை குறித்த பாடல் தமிழ் சினிமா கலைஞர்களால் ஜெயலலிதாவிற்கு வெளியிடப்பட்ட முதலாவது இரங்கல் பாடல் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ம் திகதி சிகிச்சை பலனின்றி சென்னை அப்பலோ வைத்தியாசாலையில் காலமானமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்