வறுமைக்கோடு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு முதலிடத்தில்!

March 12, 2017

சிறீலங்காவில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்தின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.

வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 4,229 ரூபாவுக்குக் கீழ் தனிநபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம், 4,396 ரூபாவாகும்.

அதையடுத்து, கம்பகா (ரூ. 4,391), களுத்துறை(ரூ 4,281),  மாத்தளை (ரூ 4,248), நுவரெலிய (ரூ. 4,266), மன்னார் (ரூ. 4,368),, வவுனியா (ரூ. 4,322), கிளிநொச்சி (ரூ. 4,288), மட்டக்களப்பு (ரூ. 4,281), திருகோணமலை (ரூ. 4,230), கேகாலை (ரூ. 4,270),  ஆகிய மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி (ரூ. 4,222), காலி (ரூ. 4,089), மாத்தறை (ரூ. 4,063), அம்பாந்தோட்டை (ரூ. 3,895), யாழ்ப்பாணம் (ரூ. 4,169), முல்லைத்தீவு (ரூ. 4,183), அம்பாறை (ரூ. 4,197), குருணாகல (ரூ. 4,086), புத்தளம் (ரூ. 4,225), அனுராதபுர (ரூ. 4,001), பொலன்னறுவ (ரூ. 4,171), பதுளை (ரூ. 4,054), மொனராகல (ரூ. 3,843), இரத்தினபுரி (ரூ. 4,110). ஆகிய  மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள்
செவ்வாய் June 20, 2017

ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

வெள்ளி June 16, 2017

புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களை உடைத்துப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடனும், தமிழீழத் தனியரசுக் கருத்தியலை மழுங்கடிக்கும் நிகழ்ச்சித் திட்டத்துடனும் மகிந்த ராஜபக்சவின்